Wednesday, December 29, 2010

சித்த மருத்துவ - குறிப்புகள்

மேகரோகம் குணமாக

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

இரத்த பேதியை குணப்படுத்த

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.

மூட்டுவலி குணமாக

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பற்கள் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

ஆண்மை குறைவு நீங்க

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

முடி உதிர்வதை தடுக்க


முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.  பேன் நீங்கும். 

முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.  அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு.  அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.

நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.

தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.

பேதியை நிறுத்த

பேதியை நிறுத்த

பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து.  வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும்.  மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும். 

வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது.  இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது.

Wednesday, December 15, 2010

சித்தர்கள் பற்றிய தகவல்கள் - அட்டமகா சித்துக்கள்

சித்தர்கள் பற்றிய தகவல்கள் - அட்டமகா சித்துக்கள்

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகலை அடைய வேண்டும் என்றும் அறிவுறிதினர் அவைகளின் பெயரும் அதன் அர்த்தமும்

1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது


3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை (புற இன்பங்களை) தவிற்க்க வேண்டும்.

பதினெண் சித்தர்கள்

பதினெண் சித்தர்கள்

தில்லையில் திருமூலர்,

அழகர் மலையில் இராமதேவர்,

அனந்த சயனத்தில் கும்ப முனி,

அருணையில் இடைக்காடர்,

வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,

எட்டுக்குடியில் வான்மீகர்,

மருதாசலத்தில் பாம்பாட்டி,

மாயுரத்தில் குதம்பை,

ஆருரில் கமல முனி,

பழநியில் போகர்,

பரன்குன்றில் குதம்பை,

திருப்பதியில் கொங்கணர்,

இராமேசுரத்தில் பதஞ்சலி,

காசியில் நந்தி,

கருவூரில் காங்கேயர்,

பொய்யூரில் கோரக்கர்,

சோதிரங்கத்தில் சட்டமுனி,

மதுரையில் சுந்தரானந்த தேவர் 60 எனப் பதினெண்மர் சித்தரெனக் குறிப்பிடப்படுகிறது

Saturday, December 11, 2010

சித்த மருத்துவ குறிப்புகள் 1

சித்த மருத்துவ குறிப்புகள் 1

(சித்த மருத்துவம்)


தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீ¡¢ல் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீ¡¢ல் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அ¡¢த்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்தி¡¢ இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசா¢ ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

9. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

10. தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

12. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

13. கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

14. சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

15. கபம் நீங்கி உடல் தேற: கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

16. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

17. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீ¡¢ல் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

18. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்

19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

20. காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

மஞ்சள் காமாலை குணமாக

மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆறாதபுண் குணமாக

மருதாணி இலைகளை துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் காய்ந்தவுடன் அதில் இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் மைபோல் அரைத்து பின் தேவையான அளவு துணியில் பூசி, மருந்தை புண்ணின் மீதுப்படும்படி வைத்து கட்டு போட வேண்டும். இனது நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் புண் நன்றாக ஆறிவிடும்.

தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் சுழித்து குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி தீரும். இதை தொடர்ந்து பூசி வர தேமல் மற்றும் தோல் கரும்புள்ளிகள் மறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் நல்ல மலர்ச்சியடையும்.

ஜலதோஷம்

ஜலதோஷம் என்பது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. காரணம் நமது தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதே. ஈரக்காற்றில் உலவுவதால் அல்லது மழையில் நனைந்ததினால் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

வழுக்கையில் முடிவளர

வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே. கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.